யாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்.தென்மராட்சி - வரணி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் மீது இன்று காலை வன்முறை கும்பலினால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

இச்சம்பவம் காலை 6 மணிக்கு வரணி இயற்றாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில் பருத்தித்துறை வீதி வரணியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளர் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொட்டன் பொல்லுகளோடு வந்து அத்துமீறி வீடு புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் அவரது தொலைபேசியையும் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதையடுத்து கடை உரிமையாளர் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை அதிரடியாகக் கைது செய்துள்ளதுடன் ஏனையோரை தேடிவருகின்றனர்.
Previous Post Next Post