யாழ்.மாநகரில் சிறப்பு நடவடிக்கையில் பொலிஸார்! (படங்கள்)

யாழ்.மாநகரில் அதிகரித்த வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை யாழ்.பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக ஒளியூட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் வேலை திட்டமே நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்.பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகேயின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த வேலை திட்டமானது யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி முன்னெடுத்திருந்தனர்.
Previous Post Next Post