பிரான்ஸில் வாகனங்களில் குளிர்கால ரயர்கள் கட்டாயமாகின்றது! 135 ஈரோக்கள் அபராதம்!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
கார் மற்றும் வாகனங்களில் பருவகால ரயர்கள் பொருத்தப்பட்டிருப்பது கட்டா யமாக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரையான குளிர்காலப் பகுதியில் இந்த நடைமுறையைக் கட்டாயமாக்குகின்ற சட்டம் இந்த ஆண்டு முதல் அமுலாகிறது. 

நாட்டின் மலைப்பிரதேச மாவட்டங்களில் மலைப் பகுதி சட்டங்களின் ஒரு பிரிவாக 2021-2022 குளிர் காலப்பகுதியில் இருந்து சகல வாகனங்களும் நான்கு பருவங்களுக்குமான ரயர்களை(winter tires) அல்லது ரயர்களின் மேல் பொருத்தி அகற்றக் கூடிய வழுக்கித்தடுப்புச் சாதனங்களைக் (removable equipment) கொண்டிருக்க வேண்டும். 

Pneus hiver அல்லது chaînes என்று பிரெஞ்சு மொழியில் கூறப்படுகின்ற ரயர்கள் மற்றும் சாதனங்களைப் பொருத்த வேண்டிய கட்டாயம் முதற் கட்டமாக நாட்டின் 48 மாவட்டங்களில் இன்று நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகின்றது.

விதிகளை மீறும் சாரதிகளிடம் 135 ஈரோக்கள் அபராதம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை விதிவிலக்காக அபராதத் தொகை செலுத்துவது கட்டாயமாக இருக்காது. அடுத்த குளிர் காலப்பகுதியில் இருந்தே அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

குளிர்கால ரயர் அவசியமான வீதிகளை குறியிட்டுக் காட்டும் பலகைகள் தெருக்களின் ஆரம்ப பகுதியில் இடப்பட்டிருக்கும். பாரிஸ் நகரம் மற்றும்  இல்-து- பிரான்ஸின் மாவட்டங்களில் இந்த விதி கட்டாயமாக்கப்படவில்லை.

ஆனால் இங்கிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய வாகனச் சாரதிகள் விதிகளைக் கவனத்தில் கொள்வது அவசியம். 

சட்ட விதிகள் நடைமுறைக்கு வருகின்ற மாவட்டங்கள் வருமாறு :
L'Ain (01), Allier (03), Alpes-de-Haute-Provence (04), Hautes-Alpes (05), Alpes-Maritimes (06), Ardèche (07), l 'Ariège (09), Aude (11), Aveyron (12), Cantal (15), Corrèze (19), Côte-d'Or (21), Creuse (23), Doubs (25), Drôme (26), Gard (30), Haute- Garonne (31), Hérault (34), Isère (38), Jura (39), Loire (42), Haute-Loire (43), Lot (46), Lozère (48), Meurthe-et-Moselle (54) , Moselle (57), Nièvre (58), Puy-de-Dôme (63 ), Pyrénées-Atlantiques (64), Hautes-Pyrénées (65), Pyrénées-Orientales (66), Bas-Rhin (67), Haut- Rhin (68), Rhône (69), Haute -Saône (70), Saône-et-Loire (71), Savoie (73), Haute-Savoie (74), Tarn (81), Tarn-et-Garonne (82 ), Var (83) ), Vaucluse (84), Haute-Vienne (87),Vosges (88), Yonne (89), Territoire de Belfort (90), Corse-du-Sud (2A) and Haute-Corse ( 2B).
Previous Post Next Post