3 நிபந்தனைகளின் கீழ் எரிவாயு விநியோகத்துக்கு நாளை முதல் அனுமதி!


மூன்று அடிப்படை நிபந்தனைகளுக்கு உள்பட்டு நாளை ( டிசெம்பர் 5) முதல் உள்நாட்டு எரிவாயுவை மீண்டும் சந்தைக்கு வெளியிட பாவனையாளர் அலுவலகள் அதிகாரசபை (CAA) அனுமதி வழங்கியுள்ளது.

1) முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சிலிண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

2) சிலிண்டர்களில் எரிவாயு வாசனை தொடர்பான இரசாயனங்கள் கட்டாயம்.

3) ஒவ்வொரு 100 சிலிண்டர்களுக்கும் ஒரு சிலிண்டர் பரிசோதிக்கப்பட வேண்டும்.

ஆகிய மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post