யாழ்.கொக்குவிலில் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள்! இருவர் மடக்கிப் பிடித்து நையப்புடைப்பு!! (படங்கள்)

யாழ்.கொக்குவில் - குளப்பிட்டி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயற்றித்தவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் பாய்ந்துள்ளது. 

அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில், அதனை பயன்படுத்தி கொள்ளையிடும் முயற்சியிலேயே 3 பேர் நுழைந்துள்ளனர். இதனை அவதானித்த அயலவர்கள் திட்டமிட்டு சுற்றிவளைத்துள்ளனர்.

இந்நிலையில் 3 கொள்ளையர்களில் 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தபோதும் ஒருவன் தப்பி ஓடியுள்ளான். இதனையடுத்து மடக்கி பிடிக்கப்பட்டவர்களை பொதுமக்கள் அடித்து நொருக்கியதுடன், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதும் நீண்ட நேரமாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

இதனையடுத்து இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்க வந்த இராணுவத்தினர் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கி சுன்னாகம் பொலிஸாரிடம் இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.

Previous Post Next Post