யாழில் தொடரும் சோகம்! தனியார் மருத்துவமனையில் மேலும் ஒரு உயிர் பறிப்பு!!

யாழ்ப்பாணம் தனியார் மருத்துமனையில் இடம்பெற்ற இருதய சத்திரசிகிச்சையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி நொதேர்ன் தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய வால்வு சத்திரசிகிச்சையின் போதே உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சங்கானை தொட்டிலடியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் கஜூரன் (வயது-37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இருதய வால்வு சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட அதிகளவு குருதிப் போக்கே உயிரிழப்புக் காரணம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சகல வசதிகளுடன் கூடிய இருதய அறுவைச்சிகிச்சை கூடம் உள்ள போதும் மாதத்தில் குறிப்பிட்டளவு சத்திரசிக்சையே மேற்கொள்ளப்படும் நிலையில் தனியார் மருத்துவமனையை நாடும் நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post