சுவிஸில் இருந்து இரகசியமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்!


சுவிட்சர்லாந்தில் இரகசியமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் நிட்வால்டன் (Nidwalden ) மாநிலத்தின் அகதித் தஞ்சம் கோரி வசித்து வந்தவரே இரகசியமான முறையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இளைஞர் திருப்பி அனுப்பப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் (Stans) ஸ்ரன்சில் வசித்துவந்த குறித்த இளைஞர், அகதி அந்தஸ்த்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவருடைய சம்மதமின்றி வலுக்கட்டாயமாக திருப்பியனுப்பப்பட்டதாக இளைஞரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அகதி அந்தஸ்த்து பெற அதிகாரிகளை சந்திக்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டதுடன், உறவினர்களை சந்திக்க விடவில்லை எனவும் தெரியவருகின்றது.

மேலும் குறித்த இளைஞர் இரகசியமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் அவர் தம்முடன் எவ்வித உடமைகளையும் எடுத்துச் செல்ல முடியவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post