தொடங்கியது போர்! இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் புடின்!!

உக்ரைன் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கையை ரஷ்ய இராணுவம் ஆரம்பித்துள்ளது. இராணுவ நடவடிக்கைக்கான உத்தரவை உள்ளூர் நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கினார்.

ரஷ்ய தேசிய தொலைக்காட்சியில் இன்று அதிகாலை பேசிய புடின், உக்ரைன் இராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைய வேண்டும். சரணடைய மறுத்து இரத்தக்களறி ஏற்பட்டால் அதற்கு உக்ரைனே பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.

உக்ரேனியப் படைகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லுமாறு புடின் வலியுறுத்தினார்

எனினும் எங்கள் திட்டம் உக்ரைனை ஆக்கிரமிப்பது அல்ல. நாங்கள் உக்ரைனை ஆக்கிரமிக்கத் திட்டமிடவில்லை எனவும் புடின் கூறினார்.

இதேவேளை, புடினின் இன்றைய பேச்சு உடனடி முழு அளவிலான ரஷ்ய படையெடுப்பு பற்றிய கவலைகளை அதிகரித்துள்ளது.

டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை திங்கட்கிழமை சுதந்திர நாடுகளாக புடின் அங்கீகரித்த நிலையிலேயே அந்தப் பகுதி மீது ரஷ்யப் படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, இராணுவ நடவடிக்கைக்கான உத்தரவை உள்ளூர் நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்குவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமைதிப் பேச்சுக்கு வருமாறு ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தற்காப்பு நடவடிக்கையை தனது நாடு எடுக்கும் என அவா் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post