யாழில் திடீர் சுகவீனமுற்றதாகத் தெரிவித்து உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி! 2 மாத கர்ப்பம்!!

யாழ். நெல்லியடிப் பகுதியில் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி இரண்டு மாத கர்ப்பம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் கரவெட்டி கிழவிதோட்டத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் விஷ்ணுகா (வயது- 18) என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி திடீரென சுகவீனமுற்றதாகத் தெரிவித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மாணவி இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post