யாழில் 15 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்ய முயற்சி! பெற்றோர் தடுத்ததால் வீடு தீக்கிரை!! (படங்கள்)

யாழ்.ஏழாலை பகுதியில் வீடு ஒன்று 4 பேர் கொண்ட வன்முறைக் கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

15 வயதான சிறுமியை திருமணம் செய்வதற்கு முயற்சிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர் அதனை தடுத்திருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சிறுமியின் குடும்பத்தினருக்கு பல்வேறு சிக்கல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டை தீ வைத்துக் கொழுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வீட்டார் தகவல் தருகையில், 4 பேர் கொண்ட கும்பலினால் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

15 வயதான சிறுமியை திருமணம் செய்வதை தடுத்ததே இந்த பிரச்சினைகளுக்கு காரணம். இவ்வாறான சம்பவம் தொடர்ந்தும் நடக்கிறது.

நேற்று இரவு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் இரு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

பின்னர் காலையில் முறைப்பாடு கொடுக்க சொன்னார்கள் நாங்கள் முறைப்பாடு கொடுத்திருக்கிறோம்.

ஆனால் இதுவரையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவேயில்லை என கூறினர்.
Previous Post Next Post