யாழில் டெங்கு நோய்த் தொற்று! 5 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!!

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மறுநாளான நேற்று அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு டெங்கு காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Previous Post Next Post