சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சகோதரன்..! வவுனியாவில் சம்பவம்

வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் வன்புணர்வு செய்த சகோதரனை நெளுக்குளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக தெரிவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டடுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய 26 வயதுடைய சகோதரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post