யாழ்.வல்லை பாலத்திலிருந்து விழுந்து காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு! மரணத்தில் சந்தேகம்!! (வீடியோ)

யாழ்.வல்லை பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து காணாமல்போனதாக கூறப்படும் 19 வயதான இளைஞன் இன்று காலை காலை கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையினால் பின்னப்பட்டிருப்பதாலும் முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம்தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல் போன நிலையில்செவ்வாய்க்கிழமை(22) மாலை முதல் அவரைத் தேடும் பணி இடம்பெற்றது.

இந்நிலையில் தவறிவிழுந்த இளைஞரைத் தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டபோதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post