பிரான்ஸில் முட்டைக்குத் தட்டுப்பாடு: விலையேற்றம்! ஐரோப்பிய நாடுகளிலும் தாக்கம்!! (வீடியோ)

பிரான்ஸ் மக்களின் முக்கிய உணவு வகைகளில் ஒன்றான முட்டைக்குத் தற்போது பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் ஐரோப்பியாவில் நிலவிய பறவைக் காய்ச்சல் காரணமாக பல கோடிக் கணக்கான கோழிகள் கொல்லப்பட்டன.

குறிப்பாக பிரான்ஸில் சுமார் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டிருந்தன. அதேநேரம் கடந்த கோடைக் காலம் முதல் இன்று வரை 7 இலட்சம் கோழிகள் கொல்லப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முட்டையின் விலையும் அதிகரித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிகள் அழிக்கப்பட்டதாலும், தற்போது கோழிகளின் உணவுகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாகவும் முட்டைகளுக்கான தட்டுப்பாடும். விலையேற்றமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரான்ஸின் அங்காடிகளில் முட்டைகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் 20 வீததத்தால் விலைகளும் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பிரான்ஸ் மட்டுதல்ல ஐரோப்பிய நாடுகளிலும் முட்டைக்கான தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post