பிரான்ஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு! (வீடியோ)

பிரான்சின் வடமேற்கு பிராந்தியமான Rennes நகருக்கு அருகே வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் புதன்கிழமை Saint-Jacques-de-la-Lande எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு வசித்த தந்தை, தாய் மற்றும் அவர்களது இரு மகள்கள் என மொத்தம் நால்வர் புதன்கிழமை சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

உடற்கூறு பரிசோதனைகளில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மேற்படி மரணம் சம்பவித்ததாக தெரியவந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post