க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது!

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை https://doenets.lk/ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

இம்மாதம் 30ஆம் திகதிக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே தற்போது பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post