யாழில் தலைவிரித்தாடும் போதைப் பாவனை! நடு வீதியில் பெண்களுடன் நடக்கும் பாலியல் சீண்டல்கள்!! பீதியில் பயணிக்கும் மக்கள்!!! (வீடியோ)

யாழ்.சங்கானை நகரினை அண்மித்த பகுதிகளில் போதைப் பொருள் பயன்படுத்திய காவாலிகள்,  பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது மோசமாக அதிகரித்துள்ளது.

சங்கானை சிவப்பிரகாசம் மகாவித்தியாலத்திற்கு அருகிலுள்ள மதகில் தினமும் போதப்பொருள் பயன்படுத்திவிட்டு ஒன்றுகூடும் காவாலிகள், வீதியை மறித்து நின்று மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதால் பாடசாலைகளுக்கும் அருகிலுள்ள இரு கல்வி நிலையங்களுக்கும் செல்லும் மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் சங்கானை நகரின் மல்லாகம் சந்தியின் முதலாம் ஒழுங்கையிலும் மல்லாகம் வீதியிலுள்ள பசாஜ் சேவிஸ் நிலைய சந்தி மற்றும் அருகிலுள்ள ஒழுங்கைகளிலும் கூடி நிற்கும் காவாலிகள், மாணவிகள், இளம் பெண்களின் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இச் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்களில் பலர் பாடசாலை செல்லாத 18 வயதிற்கு குறைந்த பதின்ம வயதுக் காவாலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் போதைப் பொருள் கடத்தலுக்கு இச்செய்தியில் காணப்படும் சிவப்புநிற 200-0060 இலக்கமுடைய முச்சக்கரவண்டி பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலையிலிருந்து 100 மீற்றர் தூரமுடைய பிளைக் வீதியிலுள்ள வெற்றிலைக்கடை உட்பட அப்பகுதில் பல இடங்களில் உயிர்க்கொல்லி போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுகிறது.

பெயருக்கு பல பொது அமைப்புகள் இருக்கிறதாக கூறப்பட்டாலும் இவர்களும் எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் உயர்மட்டம் மற்றும் ஆளுனர் உடனடியாக இதில் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Previous Post Next Post