கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டிக் கொலை!

கிளிநொச்சி - புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36 என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலை வீதியால் சென்றவர்கள் சடலமொன்று வாய்க்காலில் இருப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் புதுமுறிப்பு குளத்தின் கீழ் உள்ள நீர்பாசன வாய்க்காலில் சடலத்தை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி பார்வையிட்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post