முல்லைத்தீவில் கொடூரம்! கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வர்த்தகர்!! (படங்கள்)

முல்லைத்தீவு - முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறுவியாபார வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் வணிக நிலையத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 68 வயதுடைய அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் போது அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Previous Post Next Post