ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதியின் பின்னணியில் ரஷ்யா? (வீடியோ)

ஜேர்மன் அரசை கவிழ்க்க திட்டமிட்டதாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜேர்மனி முழுவதும், சுமார் 3,000 பொலிசார், நூற்றுக்கணக்கான இடங்களில் ரெய்டுகள் நடத்தினார்கள்.

அவர்கள் நடத்திய ரெய்டுகளின் விளைவாக வலதுசாரிக் குழு ஒன்றின் ஆதரவாளர்களான 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் முன்னாள் இராணுவத்தினரும், இந்நாள் இராணுவத்தினர் ஒருவரும் அடக்கம்.

ஜனநாயக அரசில் நம்பிக்கை இல்லாத அந்தக் குழுவினர் மன்னராட்சியைக் கொண்டு வர விரும்புகிறார்கள்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு திட்டமிட்டுள்ள இந்த குழுவினர் ரஷ்ய ஆதரவு கொண்ட இளவரசர் ஒருவரை ஜேர்மனியின் தலைவராக்க விரும்புகிறார்கள்.

நாடாளுமன்றத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இந்தக் குழுவினர், ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அரசாளுவதற்காக ஒரு நிழல் அரசாங்கத்தையே உருவாக்கி வைத்துள்ளார்கள் என்னும் விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ரஷ்யக் குடிமகன் ஒருவரும் அடங்குவார்.

ஆகவே, இந்த சதியின் பின்னணியில் ரஷ்யா உள்ளதா என கேள்வி எழுதுள்ள நிலையில், இது உள்நாட்டு விவகாரம் என்று கூறியுள்ள ரஷ்ய தரப்பு, தங்களுக்கும் இந்த ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளது.
Previous Post Next Post