கனரக வாகனம்-மோட்டார் சைக்கிள் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

வவுனியா - செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் தட்டாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் ரங்கெத்கம பகுதியை சேர்ந்த நந்தன கிருசாந்த வயது 41 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசராணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post