கனடாவில் இலங்கை தமிழருக்கு சிறை! தண்டனை! தண்டனை முடிந்ததும் நாடு கடத்தப்படலாம்?

கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன.

அதன்படி படுகொலை குற்றச்சாட்டில் பதினொன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை செய்ய துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கு முன்னர் 5 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், மேலும் ஆறரை ஆண்டுகள் சிறை வைக்கப்படவுள்ளார்.

அதேவேளை சந்தேகநபர் கனேடிய பிரஜாவுரிமை கொண்டவர் இல்லை என்பதனால் , தண்டனைக் காலம் முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post