யாழ்.போதனா வைத்தியசாலையின் மாடியிலிருந்து வீசப்பட்ட 3 மாதக் கருவின் சடலம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்ட கருவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக கருவின் சடலம் கீழே விழுந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கருத்தரித்த ஒருவர் இதனை பிரசவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட கரு மூன்று மாத வளர்ச்சிக் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post