நாடு கடத்த முயன்ற பிரித்தானியா! போராடி வென்ற 64 வயது இலங்கைத் தமிழ்ப் பெண்!!

நாடு கடத்தப்படும் நிலைமையை எதிர்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 64 வயதான பெண்ணொருவர், கடந்த ஆறு ஆண்டுகளாக பிரித்தானியாவின் உள்துறை அலுவலகத்துடன் போராடி அந்த நாட்டிலேயே தங்கியிருப்பதற்கான உரிமையை வென்றுள்ளார்.

தெ இன்டிபென்டன்ட் இணையம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

66 வயதான சுசிதா பாலசுப்பிரமணியம் என்ற இலங்கை பெண் தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளை விட்டு இலங்கைக்கு மீள திரும்புமாறு உத்தரவிடப்பட்டார்.

பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் பணிபுரிந்த அவருடைய கணவரான 74 வயதான சண்முகம் சமீபத்தில் ஓய்வு பெற்றதை அடுத்து தேவையான அனுசரணை வருமான வரம்பை காரணம் காட்டி இலங்கைப் பெண்ணை நாடு கடத்த இங்கிலாந்தின் உள்துறை அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

1994 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற சுசிதாவின் கணவரான பாலசுப்பிரமணியனுக்கு உள்துறை அலுவலகம் ஏதிலி அந்தஸ்து வழங்கியது.

அவர்களின் நான்கு குழந்தைகளும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருடன் சேர்ந்து ஏதிலி அந்தஸ்தையும் பெற்றனர். இந்தநிலையில் சுசிதாவும் 2014 இல் துணை விசாவில் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

இதில் பாலசுப்பிரமணியம் ஓய்வூதியம் மற்றும் தனிப்பட்ட நிதியை சேமித்திருந்தாலும் கூட, அனுசரணைக்கான 18,600 ஸ்ரேலிங் பவுண் வேலைவாய்ப்பு வருமானத்தைக் காட்ட வேண்டும் என்று உள்துறை அலுவலக குடியேற்ற விதிகளை கோடிட்டு சுசிதாவை நாடு கடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், இந்த தம்பதியினர், தங்களுக்கு தமது பிள்ளைகளால் நிதியுதவி இருப்பதாக வாதிட்டனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, சுசிதா பாலசுப்பிரமணியம் பிரித்தானியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post