
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கிளாலி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியான் பீரிஸ் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
