இச் சம்பவம் தொடர்பாக இலங்கையில் பொலிசாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான கிருஜா என்ற இளம் குடும்பப் பெண்ணுக்கே இந் நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டிசுட்டான் பகுதியைச் சேர்ந்தவனும் பிரான்சில் வசித்து வந்தவனுமாகிய 31 வயதான தப்பிராசா சுரேஸ் என்பவனுடன் கிருஜாவுக்கு கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடைபெற்று 2023ம் ஆண்டு கிருஜா பிரான்ஸ் சென்றுள்ளார். இன்னும் கிருஜாவுக்கு நிரந்தர விசா கிடைக்கவில்லை எனத் தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையில் கிருஜாவுக்கு பிரான்ஸ்சில் பல பாடசாலை நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களில் பலர் கிருஜாவிடம் நட்பு ரீதியாக கதைத்து வந்துள்ளார்கள். இதனை அறிந்த சுரேஸ் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என எச்சரித்து வந்துள்ளார். இருப்பினும் சுரேஸ்சின் எச்சரிக்கைகளை மீறி கிருஜா தனது பாடசாலை நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவருகின்றது.
இதன் காரணமாக ஒரு தடவை கிருஜாவை சுரேஸ் தாக்*கியுள்ளதாகவும் இதனையடுத்து கிருஜா பிரான்ஸ் பொலிசாரிடம் முறையிட்டு சுரேஸ் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. இச் சம்பவம் கடந்த வருடம் மார்ச் மாதம் அளவில் இடம்பெற்றுள்ளது.
கிருஜாவின் தாயாரின் 50 ஆவது பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அதற்காக கிருசாவின் தாயாருக்கு தெரியாது சப்ரைஸ்சாக கிளிநொச்சிக்கு செல்ல வேண்டும் எனவும் கிருசாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தாயாருக்கு அணிவிப்பதற்கு 3 பவுணில் சங்கிலியும் வாங்கி கிருசாவிடம் கொடுத்தே கிருசாவை கடந்தவாரம் இலங்கைக்கு வந்துள்ளான் சுரேஸ்.

கிருசாவை கிளிநொச்சிக்கு கொண்டு செல்லாது தாயின் பிறந்த நாளுக்கு வீட்டுக்குச் சென்று சந்திக்க வேண்டும் என கூறி கொழும்பு புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்று எடுத்து கிருசாவுடன் தங்கியுள்ளான் சுரேஸ். அன்று இரவே கிருசாந்தியை கட்டி வைத்து கொடூ*ரமாகத் தாக்*கியதுடன் அவளை கட்டி வைத்துவிட்டு அவளது 11 பவுண் பெறுமதியான தாலிக்கொடி உட்பட்ட 25 பவுண் நகைகள் மற்றும் தாய்க்கு கொடுக்க கொண்டு சென்ற சங்கிலி மற்றும் கிருசாவின் பாஸ்போட், இலங்கை அடையாள அட்டை உட்பட்ட பெறுமதி வாய்ந்த ஆவணங்கள் உட்பட்டவைகளுடன் சுரேஸ் அங்கிருந்து தப்பி கட்டுநாயக்காவிலிருந்து உடனடியாகவே பிரான்ஸ் வந்துவிட்டதாகத் தெரியவருகின்றது.
அடுத்த நாள் மாலையே கிருசாவின் முனகல் சத்தம் கேட்டு வீட்டை வாடகைக்கு கொடுத்தவர்கள் கிருசாவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். இச் சம்பவம் தொடர்பாக கொழும்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை கிருஜா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் கிருசாதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஸ் செய்த இந்தச் செயல் தொடர்பாக கிருஜாவின் பிரான்ஸ் நண்பர்கள் அங்குள்ள பொலிசாருக்கும் முறைப்பாட்டை கொடுத்துள்ளதுடன் ஊடகங்களுக்கும் தகவல்கள் அனுப்பியுள்ளார்கள்.
சுரேஸ் செய்த இந்தச் செயல் தொடர்பாக கிருஜாவின் பிரான்ஸ் நண்பர்கள் அங்குள்ள பொலிசாருக்கும் முறைப்பாட்டை கொடுத்துள்ளதுடன் ஊடகங்களுக்கும் தகவல்கள் அனுப்பியுள்ளார்கள்.