
பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலின் போது, அந்தப் பெண் குறித்த நபரின் நெஞ்சுப் பகுதியில் கத்*தியால் குத்*தியுள்ளார்.
காயமடைந்த அயல்வீட்டுக்காரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.