யாழில் கத்*திக் குத்*துத் தாக்*குதல்! 40 வயது குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கத்*திக்குத்*துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(1.1.2026) பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 40 வயதுடைய தவனேசன் என்பவர் என்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றாவின் கணவர் என்றும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் வீட்டுக்கு முன்னால் நின்று ஒருவர் மது போதையில் கூச்சலிட்டுள்ளார்.

அந்த சமயத்தில், மது போதையில் கூச்சலிட்டவர் வெளியேறி விட்டார் எனக் கருதி, மருதங்கேணி பகுதியில் சென்றுக் கொண்டிருந்த பொழுது, உயிரிழந்த நபர் வழிமறித்து கத்*தியால் தாக்*கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும், கத்*திக்குத்*துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post