
திருநெல்வேலி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 2ஆம் வருடம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் குழு மோ*தல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் வீதியில் நின்று மோ*தலில் ஈடுபட்டதுடன் , மாணவன் ஒருவன் பிளே*ட்டினால், இரு மாணவர்களுக்கு வெட்*டுக்காயங்*களையும் ஏற்படுத்தியுள்ளான்.
இந்த மோதல் சம்பவத்தில் பிளே*ட்டினால் வெ*ட்டு கா*யங்க*ளுக்கு உள்ளானவர்கள் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் காய*மடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் , பிளே*ட்டினால் வெ*ட்டி கா*யமேற்ப*டுத்திய மாணவனையும், குழுக்களாக வீதியில் மோ*தலில் ஈடுபட்டு , பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்*றச்சா*ட்டில் , 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்கள் குழுக்களை சேர்ந்த 20 பேரையும் கை*து செய்து யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முற்படுத்திய வேளை 21 மாணவர்களையும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
அதேவேளை குழு மோ*தலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கை*து செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.