
Tow truck தொழில் நடவடிக்கையில் ஏற்பட்ட போட்டி காரணமாக பல்வேறு குற்*றச் செயல்கள் இடம்பெற்றதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழுக்கள் இலக்கு வைத்து நடத்தப்பட்ட பல்வேறு குற்*றச்செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கை*து செய்யப்பட்டுள்ளனர்.
ரொரன்ரோ பொலிஸாரினால் ப்ராஜெக்ட் ஸ்வோர்ட்ஸ் என்ற சிறப்பு விசாரணை நடவடிக்கை பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறப்பு நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத துப்*பாக்கி கட*த்தல், வாகனத் திரு*ட்டு, *தீ*வைப்புச் ச*தி என்பன பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளன.
முழு தானியங்கி துப்*பாக்கி உட்பட பல ஆயு*தங்கள், 84 தோட்*டாக்கள் மற்றும் 250 கிராம் கொ*க்கெய்ன் போ*தைப்பொ*ருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
21 பேர் மீது குற்*றச்சா*ட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள போதிலும் இதுவரை நீதிமன்றத்தினால் குற்*றச்சா*ட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.