யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விபசார விடுதிகள்! இஞைர்களுடன் சிக்கிய 6 பெண்கள்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள இரு விபசார விடுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டன.

குறித்த சுற்றிவளைப்பின் போது ஆறு யுவதிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இயங்கி வந்த விடுதிகளே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post