யாழில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! (படங்கள்)

யாழ்.வடமராட்சி - அல்வாய் நாவலடி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேரும் 1990 நோயாளர் காவு வண்டியின் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
Previous Post Next Post