யாழில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பெண் நித்திரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தார் காலை எழுந்து பார்த்த வேளை குறித்த பெண்ணை காணவில்லை.

இந்நிலையில் அவர்கள் குறித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றுக் காலை வீட்டுக்கு அருகே உள்ள கிணறு ஒன்றில் சடலமாக மிதப்பது அவதானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோப்பாய் பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கோப்பாய் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் உடுவில் பிரதேச செயலகத்தில் கடந்த ஆறு மாத காலமாக காணி பிரிவில் கடமையாற்றி வருகின்றார் என அறிய முடிகின்றது.

ஆர்.நியாளினி (வயது 37) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post