
நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 9 மணியுடன் இரவு நேர போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு, பேருந்துகள் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தரிப்பிடத்துக்குள் நுழைந்த வன்முறையாளர்கள், பேருந்துகளை எரியூட்டினர். மொத்தமாக 12 பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன.
அதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி வரை பேருந்து சேவைகள் தடைப்பட்டன. மொத்தமாக 32 வழிச் சேவைகள் தடைப்பட்டதாக RATP நிறுவனத்தின் தலைவர் Jean Castex அறிவித்துள்ளார்.