யாழ். நகர ஹோட்டலில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பெண்களும் ஆண்களும்! டிக்ரொக் பிரபலங்களாம்...!

யாழ்ப்பாண நகரிலுள்ள ஹொட்டல் ஒன்றில் மதுபோதையில் மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய 6 பேர் ஹொட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களில் 3 பேர் இளம் யுவதிகள்.

தங்களை மொடல் அழகிகள், அழகர்கள் என குறிப்பிட்டு, ரிக்ரொக் வீடியோக்கள் வெளியிடும் குழுவினரே மதுபோதையில் நிதானமிழந்த நிலையில் வெளியேற்றப்பட்டனர்.

நேற்று (17) இரவு இந்த சம்பவம் நடந்தது.

நேற்று நிகழ்வொன்றின் பின்னர் ஹொட்டலின் மதுபானம் அருந்தும் பகுதிக்கு வந்த 3 இளைஞர்களும், 3 யுவதிகளும், நீண்டநேரமாக மது அருந்திக் கொண்டிருந்தனர். மதுபோதையின் உச்சத்தில் உரத்த குரலில் சத்தமிட்டு பாடத் தொடங்கியவர்கள், பின்னர் ஆடவும் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக 3 பெண்களும் பாடுகிறோம் என உரத்த குரலில் அரற்ற தொடங்கிய பின்னர், அந்த விடுதிக்கு வந்த ஏனையவர்கள் விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

ஏனையவர்களுக்கு அசௌகரியமாக செயற்பட்ட அவர்களை விடுதியை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தினர் குறிப்பிட்ட போது, அவர்கள் தகராற்றில் ஈடுபட முனைந்தனர்.

விடுதி நிர்வாகத்தினர் தாம் பொலிசை அழைப்பதாக குறிப்பிட்ட பின்னர் ஆறு பேரும் விடுதியிலிருந்து வெளியேறிச் சென்றனர். 3 பெண்களையும், 3 ஆண்களும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

வாடகை வண்டியொன்றை அழைத்து அவர்கள் விடுதியிலிருந்து வெளியேறி சென்றதை அவதானிக்க முடிந்தது.
Previous Post Next Post