கடிதம் எழுதி வைத்து விட்டு 24 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு!

முல்லைத்தீவு - கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை (17.06.2023) இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னர் கடிமொன்றினை எழுதிவைத்து விட்டு, கடன் தொல்லையால் தனது உயிரை மாய்ப்பதாக காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post