யாழில் இளைஞர் ஒருவர் மரணம்! வெளியான காரணம்!!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றிரவு(27.06.2023) ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post