யாழ். நோக்கிப் பயணித்த வாகனம் பளைப் பகுதியில் விபத்து!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலீஸ் பிரிவிற்க்குட்பட்ட புதுக்காடு சந்தியை அண்மித்த. ஏ9 வீதியில் யாழ்நோக்கி விற்பனை பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த சிறிய கப் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகன சாரதி பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post