
பாதிக்கப்பட்ட பத்து நபர்களில் ஒன்பது பேர் ஆண்கள் என தெரிவிக்கும் அறிக்கை, இலையுதிர் காலத்தில் 23% சதவீதமும், கோடைக்காலத்தில் சம அளவிலும், வசந்த காலத்தில் சற்று குறைந்து 21% சதவீதத்திலும் நிகழ்கிறது. அதுவே குளிர்காலத்தில் 31% சதவீதம் அதிகரிக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஒரு கொடிய பருவம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
முகவரி இல்லாமல் வீதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இன்று 330,000 எட்டியுள்ள என தமது அறிக்கையில் தெரிவித்துள்ள 'Les Morts de la rue' எனும் அமைப்பு, வீடுகளில் வாழும் மக்களின் மரணங்கள் சராசரியாக 79 வயது என்றால் வீதியில் வாழும் மக்களின் மரணங்கள் ஏறத்தாழ 48 வயதில் நிகழ்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.