யாழில், பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக் கணக்கில் மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் பண மோசடி விசாரணையில் சிக்காமல் 7 வருடங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்துவந்த நிலையில் நேற்றுமுன்தினம் (31.10.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் கிடைக்கபெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட, ஒட்டுமடம் தேவாலய வீதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். விசேட குற்றவிசாரனை பிரிவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த ஏழாம் மாதம் ஒருவரும், பத்தாம் மாதம் ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது சந்தேகநபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி பிரதான முகவராக செயற்பட்டு, விடுதிகளில் தங்கியிருந்து பண மோசடிகள் செய்ததாகவும் மற்றும் கொழும்பில் தங்கியிருந்து ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 2017 ஆம் ஆண்டு மல்லாகம் நீதிமன்றில் பகிரங்க பிடியாணையும் பிறப்பிக்கபட்டிருந்ததுடன், வவுனியா நீதவான் நீதிமன்றில் 1 கோடி 29 இலட்சம் ரூபா மோசடி வழக்கில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக காணப்படுவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் 27 இலட்சத்து 50ஆயிரம் பணமோசடியில் தேடப்படும் சந்தேக நபராகவும் இவர் காணப்படுகிறார்.
இந்த சந்தேக நபருக்கு எதிராக வவுனியா, மல்லாகம், யாழ்ப்பாணம் போன்ற நீதிமன்றில் 3 கோடியே 50ஆயிரம் பணமோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு எதிராக குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கு பதிவு செய்து யாழ்ப்பணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொழுது இவரை எதிர்வரும் 13 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டிற்கு அனுப்புவதாக குறி பண மோசடி சம்பந்தமான நூறுக்கு மேற்பட்ட முறைப்படுகள் பதிவு செய்யபட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.