கனடாவில் சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்! (காணொளி)

கனடா - டொர்ன்டோ நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த குருக்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனேடிய நேரப்படி,  இன்றைய தினம் (08.11.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இந்து மத வழக்கப்படி மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் ஒரு கட்டத்தில் அந்நிகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தெரியாமல் இடிபட்டு குறித்த குருக்கள் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post