
இத்தாலியில் புதன்கிழமை மின்னஞ்சல் ஊடாக விடுக்கப்பட்ட அதிர்*ச்சியூட்டும் வெ*டிகு*ண்டு அச்சு*றுத்தலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளிலிருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த மின்னஞ்சலில் இத்தாலியப் பிரதமருக்கு எதிரான நேரடி மர*ண மிர*ட்டலும் விடுக்கப்பட்டுள்ளமை நாடெங்கிலும் பெரும் பத*ற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பய*ங்கர*வாதத் தொனியில் மிர*ட்டல்
"உங்கள் பிரதமரின் மகிழுந்தின் இயந்திரப் பகுதிக்குள் நாங்கள் வெ*டிகு*ண்டை வைத்துள்ளோம்" என அந்த மின்னஞ்சலில் பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'மிசோகினிஸ்தான் விலாயத்' (Vilayat de Misoginistan) அமைப்பின் தலைவர் 'மிக்கைல் அண்ட்ரோபோவ்' (Mikhail Andropov) என்பவரின் பெயரில் இந்த அச்சுறுத்தல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
"நாங்கள் உங்களை முற்றாக அழி*ப்பதற்காகவே வந்துள்ளோம்
இத்தாலியர்கள் மீது இன*ப்படு*கொலை நடத்துவோம். உங்கள் ஒவ்வொருவரையும் கொல்*வதற்கு நான் நீண்டகாலமாகத் தயாராகி வருகிறேன்" என மிகவும் வன்*முறையான தொனியில் அந்த மிர*ட்டல் செய்தி தொடங்குகிறது. இந்த அச்*சுறுத்தல் செய்தி முதற்கட்டமாக நூற்றுக்கணக்கான கல்வி நிலையங்களுக்குச் சென்றடைந்திருந்தாலும், உண்மையான இலக்குகள் இதைவிட அதிகமாக இருக்கலாம் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
திட்டமிட்ட சதி வலை
இத்தாலி முழுவதும் சுமார் 300 பாடசாலைகளில் இந்த மிர*ட்டல் பதிவாகியுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஜுசெப்பே வல்திதாரா (Giuseppe Valditara) உறுதிப்படுத்தியுள்ளார். இது வெறுமனே ஒரு மிர*ட்டல் அல்ல, மாறாக "ஒரு தெளிவான திட்டமிட்ட வியூகம்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலைமையின் தீவி*ரத்தைக் கருத்தில் கொண்டு, பல நகரங்களில் காவற்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் (Carabinieri) பாடசாலைகளுக்கு விரைந்து தீவிர வெ*டிகு*ண்டுச் சோதனைகளில் ஈடுபட்டனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டைச் சீர்குலைக்கும் முயற்சி
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கமளிக்கவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் குயிடோ க்ரோசெட்டோ (Guido Crosetto) தெரிவித்துள்ளார். இந்த வெ*டிகு*ண்டு மிர*ட்டல்கள் நாட்டைச் சீர்குலைக்கும் ஒரு துல்லியமான ச*தித்*திட்டத்தின் அங்கமாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
"மக்களிடையே பய*த்தைப் பரப்புவதும், குழப்பத்தை உருவாக்குவதுமே இவர்களது தெளிவான வியூகமாகும். இன்று எவர் வேண்டுமானாலும் தமது கணினி ஊடாகப் பாடசாலைக்கோ, விமான நிறுவனத்துக்கோ வெ*டிகு*ண்டு இருப்பதாக மின்னஞ்சல் அனுப்ப முடியும்.
இவ்வாறான செயல்களின் பின்னணியில் வெளிநாடுகள் அல்லது எதிரிச் சக்திகளின் ச*தித்*திட்டங்கள் இருப்பது ஒருபுறமிருக்க, மனநலம் குன்றியவர்களும் விஷமிகளும் கூட இவ்வாறான புரளிகளைக் கிளப்பலாம். உண்மையான அச்*சுறுத்தல் எது, வீண் புரளி எது என்பதைக் கண்டறியக் காவற்துறையினர் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்" எனப் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.