இலங்கை வைத்தியசாலையில் சினிமா பாணியில் நடந்த வினோதம்!

வைத்தியர்போல் வேடமிட்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவம் சினிமாவில்தான் நாம் பார்த்ததுண்டு.

ஆனால் இந்த உண்மைச் சம்பவம் இலங்கையில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியரைப் போல் நடித்து வந்துள்ளார் ஒரு இளைஞன்.

அவரைக் கைது செய்த பொலிஸார் வைத்தியர்கள் உபயோகிக்கும் ஒரு குழாய், தினப் பதிவேடு மற்றும் கையளடக்கத் தொலைபேசி என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி இளைஞன் திக்வெல்ல –பதீகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டதுடன், அவர் ஒரு மனநோயாளி எனவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post