கிளிநொச்சியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்!! (02 ஆம் இணைப்பு - படங்கள்)

இரண்டாம் இணைப்பு:-

கிளிநொச்சிப் பகுதியில் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனம் மீது பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல்நகர்ப் பகுதியில் பயணித்த குறித்த வாகனம் மீது இத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இத் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பாரிய போதைப் பொருள் கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெறுவதாகப் பொலிஸாருக்கும் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இத் தகவலையடுத்து இரு தரப்பினரும் தனித்தனியாகத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது வாடகை வான் ஒன்றில் வேகமாகப் பயணித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகளை அவதானித்த பொலிஸார் கடத்தலில் ஈடுபடும் வாகனம் எனக் கருதியே இத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

சம்பவத்தின் பின்னர் குறித்த வாகனம் மதுவரித் திணைக்களத்தினுடையது எனத் தெரிய வந்தது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு:

கிளிநொச்சிப் பகுதியில் சற்றுமுன் பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுள்ளார்.

இச் சம்பவம் கிளிநொச்சி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்துப் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் மீதே இத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Previous Post Next Post