நடுவீதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள்! (வீடியோ)

இரு சகோதரர்கள் சேர்ந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று புதுச்சேரி கரிக்கலம்பக்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வழக்கமான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார், சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரு இளைஞர்களை தடுத்து விசாரித்துள்ளனர்.

அப்போது அதில் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோசப் எனத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மீது ஜோசப் தாக்க முயற்சித்துள்ளான். இந் நிலையில் ஜோசப்புடன் வந்த அவனது சகோதரன் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டான்.

நடு வீதியில் வைத்து சகோதரர்கள் இருவரும் இரு பொலிஸார் மீது மேற்கொண்ட தாக்குதலை சுற்றி நின்று தங்களது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளனர் பொதுமக்கள்.

இந் நிலையில் இரு சகோதரர்களும் தப்பியுள்ள நிலையில், தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post