தலைமறைவாகினாரா சீமான்? வாய்க் கொழுப்பால் வந்த வினை!!

அரசியல்வாதிகள் சிலர் பேச்சுத் திறமையால் சாதித்தவர்களும் உண்டு, சர்ச்சையில் சிக்கியவர்களும் உண்டு.

அந்தவகையில் சீமானின் பேச்சுத் திறன் அனைவரையும் ஈர்த்துள்ளது என்பதற்கப்பால் தேவையற்ற ஆக்ரோஷமான பேச்சுக்களால் சிறைவாசம் சென்ற வரலாறுகளும் உண்டு.

அதன்படி தற்போது அவரின் பேச்சால் அவர் மட்டுமன்றி விடுதலை செய்யப்படும் நிலையில் உள்ள அந்த ஏழு பேருக்கும் ஆபத்தாகி விட்டது.
அதாவது, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திடீரென பொங்கினார் சீமான்.

அப்போது நாங்கள்தான் ராஜீவ்காந்தியைக் கொன்றோம். ஒரு நாள் வரலாறு திரும்ப எழுதப்படும்.

இந்திய அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களைக் கொன்றொழித்த, தமிழினத் துரோகி ராஜீவ்காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதப்படும் என்று வீராவேசமாகப் பேசினார்.

இந்தப் பேச்சுத்தான் அவருக்கு மட்டுமன்றி ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இப்பதாகக் கருதப்பட்ட ஏழு பேருக்கும் ஆப்பு வைத்துள்ளது.

சீமான் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, தங்கபாலு போன்றவர்கள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  இதையடுத்து சீமான் மீது இரு பிரிவுகளில் வழங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் எங்கள் தலைவர் சீமான் ஒருபோதும் சொன்ன சொல்லை வாபஸ் வாங்க மாட்டார். கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சவே மாட்டார். கைதாகி சிறைக்குச் செல்லவும் தயங்கமாட்டார் என்று அவரது தம்பிகள் பேசி வருகின்றனர்.

இப்போதே முன் ஜாமீனுக்கு வழக்கறிஞர்களிடம் பேசி வரும் சீமான், தலைமறைவாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post