பிரசவத்தின் பின் அம்புலன்ஸில் உயிரை விட்ட நடிகை! (படங்கள்)

பிரசவம் முடிந்து ஒரு சில மணி நேரத்தின் பி;ன்னர் நோயாளர் காவு வண்டியில் நடிகை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரபல மராத்தி நடிகை பூஜா சஞ்சார் நோயாளர் காவு வண்டி தாமதமானதால் உயிரை இழந்துள்ளார். மகாராஷ்டிராவின் ஹ_ங்கொளி என்ற இடத்தில் வசித்து வந்த அவருக்கு கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதனால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து சில நிமிடத்திலேயே இறந்து விட்டது.

அதன் பின் நடிகையின் நிலையும் மோசமடைந்துள்ளது. அதனால் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அது 40 கிலோ மீற்றர் தள்ளி உள்ளது.

அங்கு கொண்டு செல்ல நோயாளர் காவு வண்டி கிடைக்காமல் திணறியுள்ளனர். காலதாமதமாக ஒரு தனியார் வண்டி கிடைத்துள்ளது.

ஆனால் கொண்டு செல்லும் வழியில் வண்டியிலேயே உயிரிழந்தார் நடிகை. நோயாளர் வண்டி சரியான நேரத்தில் கிடைத்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post