யானை மோதி தடம்புரண்டது புகையிரம்! சேவைகள் பாதிப்பு!! (படங்கள்)

காட்டு யானை மோதியதில் புகையிரதம் தடம்புரண்டதால் மட்டக்களப்பு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – பொலன்னறுவை ரயில் வீதியின் போக்குவரத்தே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த “மீனகயா” ரயில் நேற்றிரவு வெலிகந்த மற்றும் மனம்பட்டியவிற்கு இடையிலான பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

காட்டு யானை ஒன்று மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்து இதுவரைக்கும் வழமைக்குக் கொண்டு வரப்படவில்லை.

இதன் காரணமாக குறித்த வீதியில் ரயில் போக்குவரத்து இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post