ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் உயிரிழப்பு! அமெரிக்கப் படைகள் அதிரடி!!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பஹதாதி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட விசே நடவடிக்கையில் அவர் தன்னைத் தானே வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் குறிவைக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்தார்.

இந் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சற்று முன்னர் ட்வீட் செய்துள்ளார். அதில் “மிகப் பெரிய ஒன்று இப்போது நடந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதிக்கு எதிராக அமெரிக்கா ராணுவம் தாக்குதலைத் தொடங்கி உள்ளதென அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அரசு இன்னும் இதனை உறுதிப்படுத்தாத சூழலில் பாக்தாதி கொல்லப்பட்டார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய தகவலை வெளியிடுவார் என வெள்ளை மாளிகை தரப்பு கூறுகிறது.

வடமேற்கு சிரியாவில் சனிக்கிழமை அமெரிக்கப் படை அபுபக்கர் அல்-பாக்தாதியைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர் தாக்குதல் நடந்தது உண்மைதான் ஆனால் பாக்தாதி கொல்லப்பட்டாரா? என இன்னும் உறுதி செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு டிரம்ப் இது தொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.


Previous Post Next Post