குடும்பப் பெண்ணுடன் விடுதிக்குள் நுழைந்த இளைஞனால் பரபரப்பு! (படங்கள்)

வவுனியாவில் சிறைக் காவலரால் குடும்பப் பெண் ஒருவர் விடுதிக்கு அழைத்துச் சென்றமையால் அப் பகுதியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதிக்கு குடும்பப் பெண் ஒருவரை சிறைக் காவலர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் பணிபுரியும் காவலர், ஈரட்டைப் பகுதியிலிருந்து குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்வதை அவதானித்த பெண்ணின் கணவரும், மகனும், அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

அவர்களின் மோட்டார் சைக்கிள் குறித்த விடுதிக்குள் நுழைந்தபோது அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்போது சிறைச்சாலை காவலர் எனத் தெரிவிக்கப்படும் இளைஞனுக்கும் பெண்ணின் கணவன் மற்றும் மகனுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சிறைச்சாலை காவலர் தொலைபேசியில் இவ் விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து மேலும் பல சிறைச்சாலை காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு நின்ற இளைஞர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டதுடன், வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியின் போக்குவரத்தும் 30 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தது.

இது தொடர்பில் 119 தொலைபேசியூடாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு வருகை தந்த பொலிஸார் இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Previous Post Next Post